கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், கணினி பயன்பாட்டுத்துறையுடன் (பி.சி.ஏ.) ஆசஸ் நிறுவனம் மற்றும் பேட்ஸ் டெக்னாலஜீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய, மடிக்கணினியில் பயன்படுத்தப்படும் வன்பொருட்கள் குறித்த தொழில்நுட்பப் பயிலரங்கம், கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் பயிலரங்கத்திற்குத் தலைமை வகித்தார். கணினி பயன்பாட்டுத் துறைத்தலைவர் முனைவர் தே.ஹரிபிரசாத் வரவேற்றுப் பேசினார்.
ஆசஸ் இந்தியா நிறுவனத்தின் மடிக்கணினி வர்த்தகம் மற்றும் செல்போன் விற்பனைப் பிரிவு துணைத் தலைவர் தினேஷ் சர்மா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ஆசஸ் நிறுவனத் தயாரிப்பு வன்பொருட்களின் சிறப்பம்சங்கள் குறித்து உரையாற்றினார்.
ஆசஸ் இந்தியா நிறுவனத்தின் தொழில்நுட்ப உற்பத்திப் பிரிவு மேலாளர் ரோஹித் ராஜன், ஆசஸ் இந்தியா நிறுவனத்தின் தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார். அதைத்தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் வன்பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த கேள்விகளுக்குச் சிறப்பாகப் பதிலளித்த மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இப்பயிலரங்கில் மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர். முடிவில் பேட்ஸ் டெக்னாலஜீஸ் நிறுவன இயக்குநர் சஞ்சீவ்குமார் நன்றி கூறினார்
ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் மடிக்கணினி வன்பொருட்கள் குறித்த தொழில்நுட்ப பயிலரங்கம்

Leave a Reply