,

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா

srcas
Spread the love

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-25-ம் கல்வியாண்டு இளநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு வரவேற்பு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசுவாமி, விழாவிற்குத் தலைமை வகித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், வரவேற்றுப் பேசி பின்னர் கல்லூரியின் சிறப்புகளைப் பட்டியலிட்டார்.

கோவை மேற்கு மண்டலக் காவல்துறைத் தலைவர் கே.பவானீஸ்வரி   விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு, கல்லூரி கையேடு வெளியிட, அதை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி பெற்றுக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்களாகிய மற்றும் சென்னை சம்பா பப்ளிசிங் கம்பெனி இயக்குநர் மற்றும் ரோட்டரி கவர்னர் ஆர்.எஸ். மாருதி, எச்.ஆர். எவிடென் டிஜிட்டல் அண்டு கிளவுட் பிசினஸ் துணைத் தலைவர் மற்றும் உலகத் தலைவர் திரு. ஆர். ஸ்ரீ ராம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

பின்னர், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு விழாவில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் 2,200-க்கும் மேற்பட்ட புதிதாக இளநிலை பட்டப்படிப்பில் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கணிதத்துறைத் தலைவர் முனைவர் எம். உமா நன்றி கூறினார்.