ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் “சினாரியோ-2025” மாணவர் கலைத் திருவிழா

Spread the love

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில், “சினாரியோ-2025” என்ற மாணவர் கலைத் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. இதன் தொடக்கவிழாவிற்கு, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார்.

எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி டி.மகேஷ்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து, குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து “சிர்லயா” இசை வாத்தியக்குழுவை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் வரவேற்பு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, தனிநபர் பாடல், குழுப் பாடல், தனிநபர் நடனம், குழு நடனம், இசைக் கருவிகள் மீட்டுதல், மௌன நாடகம், தனிநபர் நடிப்பு ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

இவற்றில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதை ஏராளமான மாணவ, மாணவிகள் கண்டு களித்தனர். இதனால் கல்லூரி வளாகமே கொண்டாட்டத்தில் திளைத்திருந்தது. முன்னதாக மாணவர் மன்றத் தலைவர் எஸ்.கே. கௌதம்குமார் வரவேற்றுப் பேசினார். முடிவில் கவின் கலை மன்றத் தலைவர் என்.ஹரி ஆதர்ஷ் நன்றி கூறினார்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மாணவர் மன்றம் மற்றும் கவின் கலை மன்றத்தினர் சிறப்பாக செய்துள்ளனர். இரண்டாவது நாள் மாலை நடைபெறும் பரிசளிப்பு விழாவில், எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாாி சி.வி.ராம்குமார், வெற்றியாளர்களுக்கு பரிசுக்கோப்பை, ரொக்கப்பரிசு வழங்குகிறார்.