கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2025-26-ம் கல்வியாண்டுக்கான மாணவர் மன்றம் மற்றும் கிளப்புகள் தொடக்கவிழா, கல்லூரி கலையரங்கில் இன்று (02.07.2025) நடைபெற்றது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் விழாவிற்குத் தலைமை வகித்து, மாணவர் மன்ற நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து, வாழ்த்தினார். பி.காம். சி.எஸ். மூன்றாமாண்டு மாணவர் எஸ்.கே.கௌதம்குமார் மாணவத் தலைவராகவும், பி.எஸ்சி., கணினி அறிவியல் மற்றும் சைபர் செக்யூரிட்டி மூன்றாமாண்டு மாணவி எஸ்.வைஷ்ணவி துணைத் தலைவராகவும், பி.எஸ்சி. தகவல் தொழில்நுட்பத்துறை இரண்டாமாண்டு மாணவர் என்.ஜி.திவிஜேஷ் செயலாளராகவும், பி.சி.ஏ., இரண்டாமாண்டு மாணவி இணைச் செயலாளராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.
இதேபோல் அனைத்து துறைகள் மற்றும் கல்லூரியில் செயல்படும் 28 கிளப்புகளின் மாணவர்களின் தலைவர், செயலாளர், துணைத் தலைவர், துணைச் செயலாளர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு துறைத்தலைவர்கள் மற்றும் கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் கல்லூரியின் சால்வை அணிவித்து கௌரவித்தனர்.
முன்னதாக பி.காம். சி.எஸ். துறைத்தலைவர் முனைவர் பி.வித்யா வரவேற்றார். முடிவில் பி.எஸ்சி. கணினி அறிவியல் மற்றும் சைபர் செக்யூரிட்டி துறைத்தலைவர் முனைவர் பி.கவிதா நன்றி கூறினார்.
இவ்விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகள் பேராசிரியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
Leave a Reply