கோவை மாநகரக் காவல்துறையும் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்தும் கோவை மாநகரக் கல்லூரிகளுக்கு இடையிலான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மௌன நாடகப் போட்டி கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது.
நிகழ்வுக்குக் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்து, வரவேற்றுப் பேசினார். கோவை மாநகரக் காவல் ஆணையர் ஏ.சரவண சுந்தர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.
இந்தப் போட்டியில் கோவையைச் சார்ந்த பொறியியல், மருத்துவம், சட்டம், அலைட் எல்த் சயின்ஸ், நர்சிங், கலை அறிவியல், பாலிடெக்னிக் போன்ற பல்வேறு நிலைகளில் 52 கல்லூரிகளைச் சார்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்று போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மௌன நாடகம் நடித்துக் காட்டினர்.
இப்போட்டிகளுக்கு மனநல மருத்துவர் டாக்டர் என்.எஸ்.மோனி, மாவட்ட ஆலோசகர், மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம், டாக்டர் எம்.சரண்யாதேவி, கோயம்புத்தூர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கே.சிவானந்தம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தென்னரசு, உதவி ஆணையர், போக்குவரத்துப்பிரிவு (கிழக்கு), செந்தில்குமார், காவல் ஆய்வாளர், மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆகியோர் பங்கேற்று நடுவர்களாக செயல்பட்டனர்.
அதில் முதல் மூன்று இடங்களை வென்ற மாணவர்களை கோவை மாநகரக் காவல் ஆணையர் ஏ.சரவண சுந்தர் பாராட்டி சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கினார்.
அதன்படி, கேஜிஐஎஸ்எல் பொறியியல் கல்லூரி முதல் இடத்தையும், ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி இரண்டாம் இடத்தையும், கங்கா நர்சிங் கல்லூரி மூன்றாம் இடத்தையும் பிடித்தது.
இப்போட்டியில் சிறப்பாக மௌம் நாடகம் நிகழ்த்திய மேலும் 10 கல்லூரிகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் கல்லூரியின் மேலாண்மையியல் துறை இயக்குநர் முனைவர் என்.பிரேம் ஆனந்த் நன்றி கூறினார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மௌன நாடகம்

Leave a Reply