கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், பி.காம். தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில், இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எஸ்.எஸ்.ஆர்.) ஆதரவுடன், “நீடித்த நிலையான மேம்பாட்டிற்கு பசுமை நிதியத்தின் பங்கு” என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம், கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் கருத்தரங்கத்திற்கு தலைமை வகித்தார். பி.காம். தகவல் தொழில்நுட்பத் துறைத்தலைவர் முனைவர் டி.சசிகலா தேவி வரவேற்றுப் பேசினார். திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் மேலாண்மை துறை தலைவர் முனைவர் ஜி.முருகானந்தம் ஆய்வுக் கோவை வெளியிட்டு, கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தார். பின்னர் புதுச்சேரி பல்கலைக்கழக வங்கி தொழில்நுட்பத் துறை தலைவர் முனைவர் வி.மாரியப்பன் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 350 ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். 130 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. முடிவில் பி.காம். தகவல் தொழில்நுட்பத் துறை உதவிப் பேராசிரியர் எம்.விஜிதா நன்றி கூறினார்.
Leave a Reply