ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் பாங்கறி பட்டிமண்டபம்

Spread the love

கோவையில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ‘பாங்கறி பட்டிமண்டபம்’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், சிலப்பதிகாரத்தில் செஞ்சொற்களின் கவியின்பம் அதிகம் வெளிப்படுகிறது எனக் கவிஞர்கள் மகா சுந்தர், சிவநந்தினி பேசினர். கம்பராமாயணத்தில் என பேராசிரியர் விசாலாட்சி, பிரிட்டோ தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். பெரியபுராணத்தில் என பேராசிரியர் குருஞானாம்பிகா, சிவச தீஷ் வாதாடினர்.
பட்டிமன்றத்துக்கு நடுவராக எழுத்தா ளர் பாரதி பாஸ்கர் செயல்பட்டார். அவர் உரையாற்றுகையில், “பட்டி மன்றம்
என்பது தமிழுக்கே உரிய தனித்துவமான இலக்கிய வடிவம். ‘பாங்கறி பட்டிமண்டபம்’ என்ற சொல் மணிமேகலையில் இடம்பெற்
றுள்ளது. சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பெரியபுராணம் – மூன்றுமே கவிவித்துவம் நிறைந்த இலக்கியங்கள்; இவற்றில் எதில் செஞ்சொற்களின் இனிமை, அழகு அதிகம் உள்ளது என்பதே இன்றைய விவாதம்” எனக் கூறினார்.


இந்த பட்டிமன்றத்தில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் எம்.கிருஷ்ணன், பன்னாரி அம்மன் சுகர்ஸ் நிர்வாக இயக்குநர் பாலசுப்பிரமணியன், சங்கரா மருத்துவமனை தலைவர் ஆர்.வி.ரமணி, விஜயா பதிப்பகம் வேலாயுதம், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.