ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் 65 கலைஞர்கள் பங்கேற்ற பஞ்சரி மேளம்…

Spread the love

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் பாரம்பரிய பஞ்சரி மேளம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கேரளாவின் கோவில் திருவிழாக்களில் சிறப்பாக நிகழ்த்தப்படும் பஞ்சரி மேளம், ஆறு அடி தாள வாத்தியத்தை அடிப்படையாகக் கொண்ட இசைக் கலை. இது கேரளாவின் ஆன்மீகத்தையும், கலாச்சாரப் பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தும் சிறப்பு நிகழ்வாக கருதப்படுகிறது.
இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். பத்மஸ்ரீ பெருவனம் குட்டன் மாரர் தலைமையில் 65-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து செண்டை, கொம்பு, இலத்தாளம், குழல் போன்ற பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்து சிறப்பான நிகழ்ச்சியை வழங்கினர்.
கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்ட ஏராளமான பொதுமக்கள் நிகழ்ச்சியை கண்டு களித்தனர். இந்த நிகழ்ச்சி, திருச்சூர் பூரம் திருவிழாவில் காணப்படும் அதிர்வுகளைப் போலவே உணர்வுகளை ஏற்படுத்தியதாக பலரும் தெரிவித்தனர்.