காஞ்சி மகாபெரியவர் குருவாக, ஆச்சாரியராக, வழிகாட்டியாக திகழ்ந்தவர். கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் வாழ்ந்த பலரின் வாழ்வில் ஏதாவது ஒரு மாற்றத்தை அளித்தவர் அந்த மகான்.வாழ்வு மறுமலர்ச்சியாக, அவரது பங்கு உண்டு. அவரது உடை, நடை, பாவனைகள் பழைமைவாதியாக தோன்றும். ஆனால் காஞ்சிப்பெரியவர் அறிவியலோடு ஆன்மீகத்தையும் எளிமையாக சொல்வதில் வல்லவர். தன்னை நாடி வருபவரின், துயரத்தை ஆத்மா சக்தியால் அறிந்த மகான்.அதனை போக்கவும் வழிகாட்டியவர். எதையுமே முழு தேடலுடன் அணுகும் ஈடுபாடு கொண்டவர். நம் செயல்களை கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கை இருந்தால் தவறு இழைக்க மாட்டோம். நம் வாழ்வு எனும் தேரினை செலுத்த குதிரைகள் மட்டும் போதாது,தேரோட்டிகளும் தேவை .அந்த தேரோட்டியானவர் தான் காஞ்சி மா முனி.
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் எப்போ வருவாரோ நிகழ்ச்சியில் முன்னாள் துணை வேந்தர் சுதா சேஷய்யன்

Leave a Reply