ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் எப்போ வருவாரோ நிகழ்ச்சியில் பேச்சாளர் கிருஷ்ணா

sri krishna sweets
Spread the love

உலக தத்துவ ஞானிகளின் வரிசையில் ஜிட்டு ஜே.கிருஷ்ணமூர்த்தி உள்ளார். 1895-ம் ஆண்டு நாராயண ஐயர் – சஞ்சீவி தம்பதியருக்கு எட்டாவது மகனாக மதன பள்ளியில் பிறந்தவர். தெலுங்கு அந்தணர் வகுப்பைச் சார்ந்த கிருஷ்ணமூர்த்திக்கு உபநயனம் நடைபெறுகிறது.கிருஷ்ண பரமாத்மாவின் திவ்ய தரிசனம் சிறுவயதிலேயே பார்த்தவர் ஜே.கிருஷ்ணமூர்த்தி. சிறு வயதில் தனது தாயை இழந்தவர். அவருக்கு சிரார்த்தம் கொடுக்கும் பொழுது அவர் உருவம், வந்து சாப்பிட்டு சென்றதாக சொல்லி இருக்கிறார். இளம் வயதிலேயே கிருஷ்ண மூர்த்தியின் உடலுக்குள் மைத்ரேயர் புகுந்து விட்டார். தாயின் இறப்புக்கு பின் அவரது குடும்பம் சென்னைக்கு வருகிறது. அங்கு இவரை காண அன்னி பெசன்ட் அம்மை யார் வந்து, இவரிடம் மிகப்பெரிய ஆற்றலும் சக்தியும் இருக்கிறது என உணர்ந்து கொள்கிறார். 15 வயதில் பால ரிஷி போன்ற தோற்றம் உடையவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது முதல் நூலான குருவின் காலடியில் புத்தகம் பெரும் சர்ச்சையாகிறது. தனது மகன் இது போன்ற தத்துவங்களை எழுதி இருக்க மாட்டான் என அவரது தந்தை எண்ணுகிறார். இங்கிலாந்து சென்றும் படிக்கிறார். 70 ஆண்டு காலம் வாழ்ந்த ஜே. கிருஷ்ணமூர்த்தி, தம்மையும், தம் தத்துவங்களையும் யாரும் புரிந்து கொள்ளவில்லை வருத்தப்பட்டுள்ளார். தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் அப்பாற்பட்டவர். சாஸ்திர சம்பிரதாயங்களுக்கும் அப்பாற்பட்டவர். ஜே.கிருஷ்ணமூர்த்தி தத்துவத்தை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என பேச்சாளர் கிருஷ்ணா கேட்டுக் கொண்டார்.