,

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் தூய்மை குறித்த விழிப்புணர்வு

swachatha hi seva
Spread the love

“தூய்மை என்பது சேவை” என்பதை வலியுறுத்தும் விதமாக ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் மற்றும் தேசிய மாணவர் படை மாணவிகள் இணைந்து பீளமேடு ரயில் நிலையத்தில் தூய்மை இயக்கத் திட்ட பணிகளின் கீழ் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியினை மேலாளர் எஸ்.ஏ. பாண்டுரங்கா கூடுதல் வணிகம் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அசுத்தம் இல்லா தூய்மை இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதை விளக்கும் விதமாக நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் மனிதச் சங்கிலி மற்றும் மௌன மொழி நாடகம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.