கோவையில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் அனைத்துக் கல்லூரி மாணவிகளுக்கான கலைத்திருவிழா ‘பிரயுக்தி – 2024’ நடைபெற்றது.
அழகுக்கலைகள், வீடியோ உருவாக்கம், தனித்திறன்கள், சமையல் கலை, பாடல், ஃபேஷன் வாக், நடனம் என்று களைகட்டிய பலவிதமான போட்டிகளில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கல்லூரி மாணவிகளின் கலையாற்றலையும் பல்வேறு திறமைகளையும் வெளிப்படுத்ததுவதற்கு வாய்ப்பாக அமைந்த இக்கலை திருவிழாவில் சுமார் 275 மாணவியர் பங்கேற்றனர்.
இளம்பெண்கள் தங்களுடைய கற்பனை ஆற்றலையும் திறமைகளையும் ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்த இதுபோன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா வெற்றியாளர்களுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பிரயுக்தி – 2024

Leave a Reply