ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பிங்க் ஸ்டார்ஸ் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இசை, நடனம், வெஜிடபிள் கார்விங், ஆர்ஜே தேடல் என மாணவிகளின் கலைத்திறமைகளை வெளிப்படுத்தும் பலவிதமான போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆர்வத்துடன் தங்கள் திறமைகளை அரங்கேற்றிய மாணவிகளுள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் பரிசையும் பாராட்டையும் பெற்றனர்.
கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா இதுகுறித்து கூறும்போது, கல்வியோடு மாணவிகளின் தனித்திறமைகளையும் கலையார்வத்தையும் ஊக்குவிப்பதன் மூலம் இளைய தலைமுறையை ஆக்கப்பூர்வமான வழிகளில் செயல்பட வழிகாட்டலாம். அவர்களின் கற்பனையாற்றலும் தன்னம்பிக்கையும் மேம்பட இதுபோன்ற நிகழ்ச்சிகள் உதவும் என்றார். ரேடியோ மிர்ச்சி நடத்திய இந்த நிகழ்ச்சி கல்லூரி மாணவிகளின் மத்தியில் உற்சாகத்தையும் புத்துணர்வையும் தருவதாக அமைந்தது.
Leave a Reply