மாணவிகளின் திறன் மேம்பாட்டிற்காக காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ், மஹிந்திரா, பஜாஜ் ஃபின்செர்வ், நேச்சுரல்ஸ் சலூன் உள்ளிட்ட நிறுவனங்களின் சான்றிதழ் பயிற்சிகளை வழங்கி வருகிறது. இந்த சான்றிதழ் பயிற்சிகளின் மூலம் மாணவிகளுக்குக் கல்லூரிப் படிப்போடு தொழில் நிறுவனங்களின் பயிற்சியும் இணைந்தே கிடைக்கிறது. இதனால் அவர்களின் திறன்கள் மேம்படுவதோடு வேலைவாய்ப்பு, சுயதொழில் வல்லுனர்களாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இவற்றோடு மாணவிகள் அவர்களுக்கு விருப்பமான துறை சார்ந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகளைக் கற்றுத் திறன் பெறவும் வழிநடத்தப்படுகிறார்கள். மேலும் குறுகிய கால இன்டர்ன்ஷிப், ரியல் டைம் ப்ராஜெக்ட்டுக்கும் தொழில் நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துள்ளனர். இதுபோன்ற தொடர் முயற்சிகளின் பலனாகக் கல்லூரி மாணவிகளின் திறன்களை வளர்த்து உறுதுணையாக இருந்ததைப் பாராட்டி ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரிக்கு விருது வழங்கப்பட்டது.
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரிக்கு மாணவிகளின் திறன் வளர்ப்பதில் தலைசிறந்த கல்லூரி விருது

அண்மையில் உலகத் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் மும்பையில் நடைபெற்ற விழாவில் கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியை மாணவிகளின் திறன் வளர்க்கும் தலைசிறந்த கல்லூரியாகத் தேர்வு செய்து விருது வழங்கப்பட்டது. மகளிர் மேம்பாட்டைக் குறிக்கோளாகக் கொண்ட இந்தக் கல்வி நிறுவனமானது மாணவிகளின் வேலைவாய்ப்புக்கான முயற்சிகளோடு, பல்வேறு பயிற்சிகளின் மூலம் கல்லூரிக் கல்விக்கும் தொழில்துறையின் எதிர்பார்ப்புகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை நீக்கி, மாணவிகளின் வேலைவாய்ப்புக்கான சாத்தியக்கூறுகளை அதிகரித்துள்ளது. முன்னணித் தொழில் நிறுவனங்களோடு 50க்கும் அதிகமான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு தொடர் முயற்சிகளின் மூலமாக மாணவிகளின் உடனடி வேலைவாய்ப்புக்கான பயிற்சிகளை அளித்துள்ளது. பிஎஸ்சி கணினி அறிவியலில் டேட்டா அனாலிடிக்ஸ் மற்றும் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் போன்றவை முன்னணித் தொழில் நிறுவனங்களான ஐபிஎம் மற்றும் எல்.அண்ட்.டி எஜூ டெக் நிறுவனங்களோடு இணைந்து நடத்தப்பெறுகின்றன. பாடத்திட்ட உருவாக்கம் முதல் பயிற்சிகள் வரை தொழில் நிறுவனங்களோடு இணைந்தே திட்டமிடப்படுகிறது.
Leave a Reply