கோவை பச்சா பாளையத்திலுள்ள தன்னாட்சி நிறுவனமாகிய ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (ஏ.ஐ.சி.டி.இ) நிதி உதவியுடன் புதிய ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டது.
இந்தத் திறப்பு விழாவில் ஏ.ஐ.சி.டி.யின் கல்விப் புதுமைப் பிரிவின் துணைத் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் முனைவர் அபய் ஜெரி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தனது சிறப்புரையில், நாள்தோறும் புதிய படைப்புகளை மாணவர்கள் உருவாக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும், மேலும் வளர்ந்துவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
இந்த விழாவினை எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமையேற்று தனது உரையில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாணவர்கள் கல்லூரியில் அமைந்துள்ள பல்வேறு வசதிகளைப் பயன்படுத்தி திறமைகளை வளர்த்துக்கொண்டு வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்தினார்.
இந்த நிகழ்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
முன்னதாக, இந்த விழாவின் வரவேற்புரையைக் கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ.டேவிட் ரத்தினராஜ், நன்றியுரையை முனைவர் எஸ். அனிலா வழங்கினார்கள்.
ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய ஆய்வகத் திறப்பு விழா



Leave a Reply