எஸ். என். ஆர் சன்ஸ் சாரிடபிள் டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமையேற்று அனைத்து பட்டதாரிகளையும் வாழ்த்தி, கல்வியில் சிறந்து முதலிடம் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு தங்கப்பதக்கமும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி கௌரவித்தார். மேலும் தனது உரையில், கல்விசார் சிறப்பு மற்றும் முழுமையான வளர்ச்சிக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை எடுத்துரைத்தார். சமூகத்திற்கு நேர்மறையாக பங்களிக்கும் பட்டதாரிகளை வடிவமைப்பதில் SRIT பெருமை கொள்கிறது என்று குறிப்பிட்டார்.
சிறப்பு விருந்தினராக நியூவின் துரை, குளோபல் ஹெட்-ஆரக்கிள் பிராக்டீஸ், எல்டி ஐ மின்ட்ட்ரீ, சென்னை, அவர்கள் கலந்து கொண்டு தனது சிறப்புரையில் , வளர்ந்து வரும் உலகில் அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்க அறிவைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இவ்விழாவில் 2020-2024 கல்வியாண்டில் பயின்ற பல்வேறு துறையைச் சார்ந்த 325 மாணவ மாணவியர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டது.
Leave a Reply