கல்லூரி முதல்வர் பேராசிரியர் வி.எஸ்.சீதாராமன் வரவேற்புரையாற்றினார். ஆர் சுந்தர், நிர்வாக இணை இயக்குனர், எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை, பட்டதாரிகளை வாழ்த்தி தலைமை உரையாற்றினார். விழாவின் சிறப்பு விருந்தினர் டாக்டர் . வி.பி.ஆர்.சிவக்குமார் MPT.Ph,D. டீன் பிசியோதெரபி மற்றும் துணை இயக்குனர் (மருத்துவ மற்றும் சுகாதார அறிவியல் துறை), எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் திருச்சி சிறப்புரையாற்றி பட்டதாரிகளுக்கு பட்டம் மற்றும் இயன்முறை மருத்துவ பாடங்களில் 39 முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு பதக்கங்களை வழங்கினார்.
இளங்கலை 2018-2022 ஆம் ஆண்டு மாணவி தங்கமதி. பி, இளங்கலை 2019-2023 பூர்ணிமா .டி, முதுகலை 2020 – 2022 ஆம் ஆண்டு மாணவி பவுசி நிசா.எப் அகிய வெளிச்செல்லும் மாணவிகளுக்கான எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாகம் சார்பாக தங்கப் பதக்கமும்,சான்றிதழும் வழங்கப்பட்டது. பட்டப்படிப்பை முடிந்து தங்கள் தொழில் உலகில் நுழையும் மாணவர்களை அங்கீகரிக்கும் நிகழ்வாகும்.
Leave a Reply