,

ஸ்ரீரங்கம் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி

pm modi
Spread the love

ஸ்ரீரங்கம் கோயி​லில்  பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார்.  தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை, துண்டு அணிந்து  ஸ்ரீரங்கம் வந்த பிரதமருக்கு சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் கூடி நின்று மலர்தூவி வரவேற்பு அளித்தனர். கோவிலில் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருச்சி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்று கொள்ளிடம் அருகே தரையிறங்கிய பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்றார். கோயிலுக்குச் செல்லும் வழி நெடுகிலும் ​இருந்த தொண்டர்களுக்கு கையசைத்து நன்றி கூறினார். பிரதமர் மிது மலர்களைத் தூவியும், ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழும்பியும் மேள தாளங்கள் முழங்க பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு பாஜகவினர் பிரதமர் மோடியை வரவேற்ற​னர்.

ரங்கநாதர் கோயிலில், தெற்கு கோபுர வாயில் வழியாக நுழைந்த பிரதமரை கோயில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற பிரதமரை கோவில் யானை வரவேற்றது. தொடர்ந்து,  ஸ்ரீரங்கம் ரங்கநாதரை சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் ராமானுஜர், சக்கர்த்தாழ்வார், கருடாழ்வார், மூலவர், தாயார், பட்டாபிராமர், கோதண்டராமர், உள்ளிட்ட முக்கிய சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார்.  பின்னர் கோயில் மண்டபத்தில் தமிழறிஞர்கள் பாடிய  கம்பராமாயணத்தை அவர் கேட்டார்.