ஸ்டார்ட் அப்   நிறுவனங்கள்  தொடங்குவதற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கிய ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள்

Spread the love

கோவை துடியலூர் வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2000 இல் பட்டம் பெற்ற மாணவ மாணவியர்களின் இருபத்தி ஐந்தாம் ஆண்டு வெள்ளி விழா சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாணவ சங்கத் தலைவர், வீணா ரமேஷ் அனைவரையும் வரவேற்றார். எஸ். என். ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ஆர் சுந்தர் தலைமை தாங்கி இந்த 25 ஆண்டுகளில் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மற்றும் எஸ். என். ஆர் சன்ஸ் அறக்கட்டளை வளர்ந்த விதத்தை விவரித்தார்.
2000 இல் இக்கல்லூரியில் பயின்று பட்டம் பெற்று இந்தியா மற்றும் பல பகுதிகளில் இருந்தும் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளில் பல முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் நூற்றி இருபத்தி ஐந்துக்கு மேற்பட்ட முன்னாள் மாணவ மாணவியர்கள் குடும்பத்துடன் விழாவிற்கு வருகை புரிந்து கலந்து கொண்டனர்.

விழாவின் ஒரு முக்கிய நிகழ்வாக முன்னாள் மாணவர்கள், தற்போது கல்லூரி மாணவர்களுக்கு ஸ்டார்ட் அப் தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு தொழில் முனைவோர் ஆவதற்கும் சுமார் ஒரு கோடி ருபாய் வழங்கினார்கள்.மேலும், தற்போதைய திறன் படைத்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கும் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்புக்கு ஊக்கம் தருவதற்காக ரூபாய் 20 லட்சத்திக்கான காசோலையை வழங்கினார்கள். கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கும் துறைதலைவர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

எஸ். என். ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி சி வி ராம்குமார், கல்லூரி முதல்வர் முனைவர் எ.சௌந்தர்ராஜன் , பல்வேறு துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்