வேட்டி, சட்டையில் தல தோனி

dhoni
Spread the love

ஐபிஎல் 2025 சீசன் போட்டிகள், மார்ச் 22 முதல் தொடங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர ஆட்டக்காரருமான தல தோனி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை வந்திருந்து, தனது தீவிர பயிற்சியை தொடங்கினார்.அவரின் பயிற்சி தொடர்பான வீடியோ அவ்வப்போது சிஎஸ்கே நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  தோனி வேட்டி-சட்டை அணிந்து இருந்த புகைப்படம் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைப்பக்கத்தில் வெளியாகி இருந்தது.

தோனி மற்றும் கெதர் ஜாதவ் ஆகியோர், திருமணம் ஒன்றில் கலந்துகொண்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை என பலராலும் அழைக்கப்படும் தோனி, தமிழர்களின் பாரம்பரிய உடையுடன் திருமணத்தில் கலந்து கொண்டது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *