வெள்ளி வேலை திருடிய சாமியார் கைது..

maruthamalai temple
Spread the love
கடந்த சில தினங்களுக்கு முன்பு மருதமலை ​கோயில் அடிவாரத்தில் உள்ள மடத்தில் இரண்டரை கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு லட்சம் மதிப்பிலான வெள்ளி வேல்  திருட்டு போயிருந்த நிலையில், வடவள்ளி போலீசார் திருடிய நபரை தீவிரமாக தேடி வந்தனர்.
​மேலும், சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு நடத்திய விசாரணையில் பல்வேறு ஊர்களில் மடத்திற்கு சென்று தங்கும் பழக்கம் உடைய வெங்கடேஷ் சர்மா என்ற நபர் வெள்ளி வேலை திருடியுள்ளார் என தெரிய வந்தது.தலைமறைவாக இருந்த சாமியார் வெங்கடேஷ் சர்மாவை போலீசார் கைது செய்தனர்.