,

வெள்ளியங்கிரி மலை ஏறிய மேலும் ஒரு பக்தர் உயிரிழப்பு

வெள்ளியங்கிரி மலை
Spread the love

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோவை போளுவாம்பட்டி வனச்சரகம் வெள்ளிங்கிரி பக்தர்கள் பாத யாத்திரை சென்று சுயம்பு லிங்கத்தை வழிபடுவது வழக்கம். இதனிடையே கடந்த வாரம் வெள்ளியங்கிரி மலை ஏறிய 3 பேர் அடுத்தடுத்த பலியாகினர்.

இந்த சூழலில் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ரகுராமன் (60) என்பவர் வெள்ளியங்கிரி மலைக்கு பாத யாத்திரை சென்றார்.  5வது மலையில் ஏறிய போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனிடையே அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

வனத்துறையினர் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் அவரது உடலை அடிவாரம் எடுத்து வந்து ஆலந்துறை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார் ரகுராமனின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.