கோவை மாநகராட்சியின் சாதாரண கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக மாமன்ற குழு தலைவர் ஆர். பிரபாகர் மற்றும் மாமன்ற உறுப்பினர் ரமேஷ், திருப்பூரிலிருந்து கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு குப்பைகளை கொண்டு வருவதை எதிர்த்து, பதாகைகளை ஏந்தி கோசம் எழுப்பியதால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர். பிரபாகர்,
-
திமுக ஆட்சியமைத்து கடந்த நான்கரை ஆண்டுகளில் கோவை மாநகராட்சியில் பலகோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது.
-
டீ அருந்தியதற்கே 74 இலட்சம் ரூபாய் செலவாகியதாக கணக்கு காட்டியதுதான் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
-
வெள்ளலூர் குப்பை கிடங்கில் பல்வேறு செலவினங்களின் பெயரில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. இதை விசாரிக்க சிறப்பு குழு அமைக்க வேண்டும்.
-
“கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041” திட்டம் பொதுமக்களுக்கு எந்த பலனும் தராது; இது ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கான திட்டம் மட்டுமே.
எனக் குற்றம்சாட்டினார்.
மேலும், திருப்பூரிலிருந்து கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு குப்பைகளை கொண்டு வருவதற்கான திட்டத்தை மாநகராட்சி நடைமுறைப்படுத்தினால், கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அனுமதி பெற்று, முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
இதனால் மாநகராட்சி மன்ற கூட்டம் ஒருகட்டத்தில் பதற்றமாக மாறியது.



Leave a Reply