, , ,

வெள்ளலூரில் உள்ள குப்பை கிடங்கை அகற்ற கோரி மனித சங்கிலி போராட்டம்

vasantharajan
Spread the love

வெள்ளலூரில் உள்ள குப்பை கிடங்கை அகற்ற கோரி வெள்ளலூர் குப்பை கிடங்கு எதிர்ப்பு குழு கூட்டமைப்பு சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
கோவை எல்&டி பைபாஸ் பாலம் வெள்ளலூர் வரை 10 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்தில் பாஜக தெற்கு மாவட்ட தலைவர் கே வசந்த ராஜன் மற்றும் அந்த பகுதி மக்கள் 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அந்த குப்பை கிடங்கை அகற்றவேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
கோவை மாநகராட்சியில் தினமும் உருவாகும் குப்பைகள் டன் கணக்கில் வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்த குப்பையால் அந்த பகுதியில் மிகப்பெரிய சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.  இந்த குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் பல வருடங்களாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என அந்த பகுதி மக்கள் குப்பை கிடங்கை அகற்ற கோரி மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.