கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி 14 வார்டு வெள்ளகிணறு பிரிவு, உழைப்பாளர் வீதியில் நேற்றைய கன மழையால் பாதிக்கபட்ட இடங்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, அதிகாரிகளை அழைத்து உடனே மழைநீர் வடியவும், பாதிக்கபட்ட இடங்களை சரி செய்யவும் கோவை அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பி.ஆர்.ஜி. அருண்குமார் அறிவுறுத்தினார். உடன் துடியலூர் பகுதி செயலாளர் வனிதாமணி, 14 வது வட்ட செயலாளர் பிரகாஷ், 1 வது வட்ட செயலாளர் சாந்தி பூஷன், 2A வட்ட செயலாளர் காளிசாமி, 14வது வார்டு வட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.
Leave a Reply