வெளிச்சத்துக்கு வந்த ராமதாஸின் இரண்டாவது மனைவி… பா.ம.க.வில் அடுத்த பூகம்பம்

Spread the love

கடந்த 1939 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்த ராமதாஸின் தந்தையின் பெயர் சஞ்சீவிராய கவுண்டர். அவரது தாயார் பெயர் நவநீதம். தனது மருத்துவ படிப்பை சென்னை மருத்துவக் கல்லூரியில் நிறைவு செய்தவர். திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தார். பின்பு தனியாக மருத்துவமனை தொடங்கி இரண்டு ரூபாய்க்கும் மூன்று ரூபாய்க்கும் மருத்துவம் பார்த்ததாக பாட்டாளி மக்கள் கட்சியினர் சொல்வார்கள். மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது தான் சார்ந்த வன்னியர் சமூகம் பின்தங்கிய நிலையில் இருப்பதை பார்த்து பல்வேறு வன்னியர் சமுதாய அமைப்புகளை சந்தித்து, 28 வன்னியர் அமைப்புகளை ஒன்றிணைத்து 1980 ஆம் ஆண்டு வன்னியர் சங்கத்தை தொடங்கினார். அதற்குப் பிறகு பல போராட்டங்களை ராமதாஸ் மேற்கொண்டு இருக்கிறார். மெரினா பட்டினி போராட்டம், சென்னை பேரணி, அதனை தொடர்ந்து மாநாடு, 1986 ல் எம்.ஜி.ஆருக்கு கருப்பு கொடி, ரயில் மறியல் என பல போராட்டங்களை முன்னெடுத்தவர். பின்னர் , தமிழகத்தின் முக்கிய கட்சியாக பா.ம.க. உருவெடுத்தது. தற்போது, பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை ராமதாஸ் மகன் அன்பு மணிக்கிடையே பனிப்போர் உருவாகியுள்ளது.

ராமதாஸ்- சரஸ்வதி தம்பதியினருக்கு காந்திமதி, கவிதா என்ற மகள்களும் அன்புமணி ஆகிய மூன்று குழந்தைகள். காந்திமதிக்கு சுகந்தன், பிரதீபன், முகுந்தன் என மூன்று குழந்தைகள். கவிதாவுக்கு நிதர்சன், வசீகரன் என இரண்டு குழந்தைகள். அன்புமணிக்கு அங்கமித்ரா, சங்கமித்ரா, சம்யுக்தா என மூன்று குழந்தைகள். இந்த நிலையில், தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மனைவி சரஸ்வதி இருவரும் தங்களின் 60வது திருமண நாளினை கொண்டாடினர். இதை தொடர்ந்து, ராமதாஸ் செய்த மற்றொரு விஷயம்தான் பா.ம.கவை உலுக்கியெடுத்துள்ளது. அதாவது, ராமதாஸ் தனது இரண்டாவது மனைவி சுசிலாவுடன் 60வது திருமண நாள் கொண்டாடியதுதான் அது . மாமல்லபுரத்தில் கார்ட்டன் ஹோட்டலில் இந்த விழா நடந்துள்ளது. விழாவுக்கு 200 பேர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தை அறிந்துதான் பாமக தலைவர் ஜி.கே. மணி நெஞ்சுவலி என்று ஏற்கனவே மருத்துவமனையில் படுத்து விட்டார் என்றும் சொல்கிறார்கள். ராமதாஸ் தனது இரண்டாவது மனைவியுடன் 60வது திருமணநாளை கொண்டாட ஏற்பாடு செய்தவர் சேலம் எம்.எல்.ஏ அருள்தான். விழா நடக்கும் அறைக்குள் சென்றவர்கள் அனைவரின் செல்போனும் வெளியே பறித்து வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சுசிலாவுடன் ராமதாஸ் 60வது திருமண நாளை கொண்டாடிய புகைப்படம் வெளியாகி தமிழகத்தை அதிர வைத்துள்ளது.

இதன் காரணமாகவே, அன்புமணி தனது தந்தையுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார் என்றும் சொல்கிறார்கள்.