வெறும் 1 ரூபாயில் 30 நாள் இலவச சேவைகள் – பி.எஸ்.என்.எல். சுதந்திர தின சிறப்பு சலுகை

Spread the love

இந்தியாவின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பி.எஸ்.என்.எல். நிறுவனம் “சுதந்திர தினத் திட்டம்” என்ற பெயரில் புதிய சிறப்பு சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, வாடிக்கையாளர்கள் வெறும் 1 ரூபாய் செலுத்தி ஒரு மாதத்திற்கான பல்வேறு இலவச சேவைகளைப் பெற முடியும். இந்த சலுகை ஆகஸ்ட் 1 முதல் 31 வரை மட்டுமே அமலிலிருக்கும்.

இந்த திட்டத்தின் கீழ், தினமும் 4ஜி வேகத்துடன் 2 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். மற்றும் வரம்பற்ற அழைப்புகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். கூடுதலாக, புதிய சிம் கார்டும் இலவசமாக வழங்கப்படும். இச்சலுகை குறைந்த செலவில் அதிக பயன்கள் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகையைப் பெற விரும்பும் பொதுமக்கள், அருகிலுள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது முகாம் நடைபெறும் இடங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்யலாம். சிம் கார்டைப் பெறுவதற்காக ஆதார் அட்டையின் நகலை கொண்டு செல்ல வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு துறை அறிவித்துள்ளது.