வெறி நாய் கடித்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த வடமாநில வாலிபர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று தற்கொலை

Spread the love

கோவை வெறி நாய் கடித்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த வடமாநில வாலிபர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று தற்கொலை செய்து கொண்டார். காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒடிசா சேர்ந்தவர் ராம் சந்தர் வயது 35. கோவையில் தங்கி பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை தெரு நாய் கடித்தது. இதனால் நேற்று அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அவருக்கு நோயின் பாதிப்பு அதிகமாக இருந்ததால் அரசு மருத்துவமனையில் உள்ள வெறி நாய் கடி தனி பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தனர்.அவர் திடீரென அறிவிப்பு பலகை கண்ணாடி உடைத்து தனது கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். . அவர் மூர்க்கமாக நடந்து கொண்டதால் சம்பவம் நடைபெறும் போது மருத்துவமனை ஊழியர்களால் அவரை நெருங்க முடியவில்லை.இந்த சம்பவத்தின்போது பெண் மருத்துவர் தான் பணியில் இருந்தார். உரிய பாதுகாப்புடன் அருகில் செல்ல முயற்சித்தும் முடியவில்லை. அதனால் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தோம். அவர்களும் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து அந்த நபரை மீட்டனர். அதன் பிறகு அவருக்கு சிகிச்சை அளித்தோம்.ஆனால் அவரின் உடல்நிலை மிகவும் மோசடைந்தது. ஒருகட்டத்தில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். அவரை மயக்க நிலைக்கு கொண்டு சென்று சிகிச்சை கொடுக்க நினைத்த எங்கள் முயற்சியும் செயல்படுத்த முடியவில்லை.” என்றார்.
அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ராமசந்தர் உடன் மருத்துவமனைக்கு யாரும் வரவில்லை. உயிரிழந்த பிறகு தான் அவரின் உறவினர்களுக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது. புதன்கிழமை காலை ராமசந்தர் உடலுக்கு பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளது.

அதன்பிறகு தான் முழு விபரம் தெரிய வரும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனிடையே ராமசந்தர் தன்னை தானே தாக்கி உயிருக்கு போராடும் வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை முழுவதும் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், ரேபிஸ் நோயால் ஒருவர் தன்னை தானே தாக்கி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *