, ,

வெந்ததும் வேகாததும்… கொங்கு உணவு திருவிழாவில் நடந்த தில்லுமுல்லு

kongu food festival
Spread the love

கோயமுத்தூர் விழாவின் ஒரு பகுதியாக கொடிசியா மைதானத்தில் கொங்கு திருமண உணவு திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு பெரியவர்களுக்கு 799 ரூபாய் குழந்தைகளுக்கு 499 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது 400 உணவு வகைகள் வழங்குவதாகவும் ஏற்பாட்டாளர்கள் கூறியிருந்தனர்.மேலும் இதற்காக டிக்கெட்டுகளை புக் மை ஷோ மூலமாகவே பெற முடியும், ஒரு நபர் டிக்கெட் வாங்கி உள்ளே வந்து விட்டால் அன்லிமிடெட் முறையில் சாப்பிடலாம் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.

முதல் நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் இந்த உணவு திருவிழாவிற்கு குடும்பத்துடன் வருகை புரிந்து உணவுகளை ருசித்தனர். அதிகளவிலான கூட்டமானது காணப்பட்ட நிலையில், உணவு பரிமாறும் இடத்தில் மக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ளது. அப்போது பெரியவர்கள் இளைஞர்களை அவமரியாதையுடன் பேசியுள்ளனர். அதேசமயம் முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனவும் எந்த உணவு கேட்டாலும் இல்லை என்று கூறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் உணவை கேட்டாலும் தர மறுப்பதாகவும் கெஞ்சி கெஞ்சி வாங்க வேண்டி இருப்பதாகவும் இந்த பணத்திற்கு ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட்டிருக்கலாம் என்றும் உணவும் பாதி வெந்தும் வேகாமலும் ருசியில்லாமல் இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். தற்பொழுது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.