விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்ற விதிகளில் திருத்தம்: தமிழக அரசு உத்தரவு!

Spread the love

விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதற்கான விதிகளில் தமிழக அரசு அதிரடித் திருத்தம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், விளை நிலங்களில் கட்டுமானம் மேற்கொள்ளும்போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் எண்ணிக்கை 9 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்காகப் பொதுமக்கள் அல்லது நில உரிமையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டிய அந்த 9 அவசியமான ஆவணங்கள்:

  1. கிரயம் அல்லது விற்பனைப் பத்திரம்

  2. பட்டா நகல்

  3. வடிகால் வரைபடம்

  4. தள வரைபடம்

  5. நில அமைப்பு வரைபடம்

  6. 500 மீட்டர் சுற்றுளவு வரைபடம்

  7. அரசு, புறம்போக்கு நிலம் இல்லை என்பதற்கான சான்று

  8. சிட்டா நகல்

  9. அடங்கல் சான்று

இந்த புதிய திருத்தத்தின் மூலம் விவசாய நிலப் பயன்பாடு மற்றும் கட்டுமான அனுமதி தொடர்பான முறைகள் மேலும் முறைப்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *