, ,

விவசாயி இல்லையென்றால், மனித இனமே கிடையாது ! உழவர் சிலை திறப்பு விழாவில் ஆர் கோல்டு நிறுவனர் எம்.எம்.ரங்கசாமி பேச்சு

r gold
Spread the love

ஆர் கோல்டு நிறுவனத்தின் சார்பில், கோவை உக்கடம் பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள உழவர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிர
பாகரன், மாநகர காவல்துறை ஆணையாளர் சரவணசுந்தர், ஆர் கோல்டு நிறுவனர் எம்.எம்.ரங்கசாமி ஆகியோர் பங்கேற்றனர். விழா
வின் ஒருபகுதியாக பொள்ளாச்சி புகழ் வள்ளிகும்மி ஆட்டம், கோவை புகழ் சிலம்பாட்டம் நடைபெற்றது. பொங்கல் வைத்தும் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய ஆர் கோல்டு நிறுவனர் எம்.எம்.ரங்கசாமி, ‘ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவைகளில் முதன்மையானது உணவு. விவசாயி என்பவர் கடவுளுக்கு இணையானவர். கடவுள் சக்தி என்பது விவசாயம் தான். விவசாயம், விவசாயி இல்லை என்றால், மனித இனமே கிடையாது. ஒரு நாடு பொருளாதார வீழ்ச்சி அடைந்தால், அந்த நாட்டினை விவசாயத்தால் மட்டுமே வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்லும் முடியும். விவசாய உற்பத்தி அதிகரிக்கும்போது தான், தொழிற்துறை வளர்ச்சி அடையும். தொழில்துறையின் அஸ்திவாரம் விவசாயம்தான் என்பதை மறந்து விட கூடாது. வாழ்க்கையின் அடிப்படையான விவசாயத்தை, விவசாயிகளை மக்கள் தற்போது மறந்து வருகின்றனர். இது வருத்தத்திற்குரியது. எனவே மக்களிடையே விவசாயம் மற்றும் விவசாயிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத் தவே, இந்த உழவர் சிலையினை நிறுவி பாராமரிக்க உள்ளோம். உழவையும், உழவரையும் சிறப்பித்து “உழவே தலை” என்பதை பறைசாற்றும் வகை யில், இந்த உழவர் சிலையை மக்களின் பார்வைக்கு காட்சிப் படுத்துகிறோம்.
இரண்டு காளை மாடுகளை கொண்டு உழவர் நிலத்தினை உழவு செல்வது போன்றும், ஒரு பெண்மணி விதை தூவுவது போலவும், மிகவும் தத்ரூபமாக சிலையை வடிவைமைத் துள்ளோம். சுற்றியுள்ள தூண்களில் விவசாய பூமி போன்ற வண்ணம் தீட்டி ரவுண்டானா ஒரு விவசாய நிலம் போல் காட்சியளிக்கும் வகையில் மாற்றியுள்ளோம். இந்த சிலையை முழுமையாக ஆர் கோல்டு நிறுவனம் பாரமரிக்கும்’ என்றார்.