விருதுநகர் மாவட்டம் , நபார்டு வங்கி மற்றும் சீட்ஸ் நிறுவனம் சார்பாக விவசாயிகளுக்கு , சிறுதானிய விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. சீட்ஸ் நிறுவனத் தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். மல்லாங்கிணறு பேரூராட்சி தலைவர் துளசி தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீட்ஸ் நிறுவன செயலாளர். சிவக்குமார் வரவேற்று பேசினார் . மாவட்ட வேளாண்மை துறை துணை இயக்குனரும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளருமான , நாச்சியார் அம்மாள் விவசாயி களுக்கு இடு பொருட்கள் மற்றும் சிறுதானிய விதைகளை வழங்கி சிறப்புரை யாற்றினார். நிகழ்ச்சியில், 200 விவசாயி களுக்கு குதிரை வாலி விதைகள் மற்றும் நுண்ணூட்டச் சத்து , விதை நேர்த்தி உரங்கள், வழங்கல், நபார்டு நீர் வடிப்பகுதிகளான, வடக்கு புளியம்பட்டி , பிள்ளையார் தொட்டியாங் குளம் , எழு வணி கிராமங்களுக்கு வனமரக் கன்றுகள் வழங்குதல், வடக்கு புளியம்பட்டி, பிள்ளையார் தொட்டியங் குளம் நீர்வடி பகுதி பெண்கள் கூட்டமைப்பு க்கு, சுழல்நிதி கடனாக 2 லட்சத்து 60 ஆயிரம் ஆகிய நலத்
திட்டங்கள் வழங்கப்பட்டது. மேலும் , எருமைக் குளம் நீர்வடிபடுதி விவசாயிகளுக்கு 1 லட்சம் மதிப்புள்ள வேளாண் இயந்திரங்கள். பருத்தி சாகுபடி விவசாயிகளுக்கு, இடுபொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், வேளாண்மை வணிகத்துறை துணை இயக்குனர் ரமேஷ் சீட்ஸ் திட்ட இயக்குநர் ஜெய கண்ணன் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பிசிண்டி, ராஜேஸ்வரி, பாலமுருகன் பேரூராட்சி கவுன்சிலர்கள் பாலச்சந்திரன், முருகேசன், கருப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகள் வழங்கும் நிகழ்ச்சி விருதுநகரில் நடைப்பெற்றது….

Leave a Reply