விவசாயிகளுக்கான ரூ.35,440 கோடி மதிப்பில் இரண்டு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Spread the love

விவசாய துறையின் விரைவான வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கும் புதிய ஊக்கம் அளிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு முக்கியமான திட்டங்களை இன்று டெல்லியில் தொடங்கி வைத்தார்.

இந்த விழா இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் (IARI) நடைபெற்றது. மொத்தம் ₹35,440 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசு இரண்டு புதிய வேளாண்மைத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது —

  1. தன்தான்யா கிரிஷி யோஜனா (₹24,000 கோடி)

  2. ஆத்ம நிர்பார்தா திட்டம் (₹11,440 கோடி)

இந்த திட்டங்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்வளம், உணவு பதப்படுத்தல் மற்றும் விவசாய உற்பத்தி திறன் மேம்பாட்டில் முக்கிய பங்காற்றவுள்ளன. மேலும்,

  • பருப்பு வகை உற்பத்தி அதிகரித்தல்

  • சாகுபடி பரப்பளவை விரிவுபடுத்தல்

  • அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை குறைத்தல்

  • நீண்டகால மற்றும் குறுகியகால கடனுதவி எளிமைப்படுத்தல்
    என்ற பல நடவடிக்கைகள் 100 மாவட்டங்களில் முதல் கட்டமாக அமல்படுத்தப்படவுள்ளன.

விழாவில் பிரதமர் மோடி ₹815 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதோடு ₹5,450 கோடிக்கும் மேற்பட்ட வேளாண் மற்றும் இணைந்த துறைகளுக்கான புதிய திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

நிகழ்வில் பிரதமர் விவசாயிகளுடன் நேரடியாக கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.