கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி விளாங்குறிச்சி பகுதி அதிமுக சார்பில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏழாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார், கோவை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். உடன் பகுதி செயலாளர் வேலுசாமி, வட்ட செயலாளர்கள் மாணிக்கம், விஜயகுமார், சம்சுதீன், பால்ராஜ், சண்முகசுந்தரம் மற்றும் அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் உள்ளனர்.
விளாங்குறிச்சி பகுதி அதிமுக சார்பில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

Leave a Reply