கோவை உக்கடம் பகுதியில் இன்று உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன் வரத்து வழக்கத்தை விட சற்று அதிகமாக இருந்தது. இதனால் மீன்களின் விலையானது குறைந்தது. இந்த நிலையில் மீன்களின் விலை குறைந்துள்ளதால் காலை முதலே மீன் மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று மத்தி மீன் ஒரு கிலோ 150 ரூபாய், சங்கரா மீன் 250 ரூபாய், வஞ்சரம் 500 ரூபாய், செமின் 300 ரூபாய், அயிலை 150 ரூபாய், நண்டு 200 ரூபாய், ஊலி 300 ரூபாய், நெத்திலி 300 ரூபாய் என விலை குறைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Leave a Reply