இந்தியாவில் பிக் 4 என்று சொல்லப்படும் 4 விஷப்பாம்கள் கடியால்தான் அதிக உயிரிழப்புகள் நடக்கிறது . அதாவது, நாகப்பாம்பு, கட்டு விரியன், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன் பாம்புகளால்தான் அதிக மக்கள் கொல்லப்படுகின்றனர்.
பொதுவாக விஷப்பாம்புகளில் விரியன் ரக பாம்புகளின் பற்கள்தான் மிக நீளமாக இருக்கும். இவை, அட்டாக் செய்யும் வேகமும் அதிகம். பாம்புகளின் தலையில் அவற்றின் கோரை பற்கள் அமைந்துள்ள பகுதிக்கு மேலை கண்களுக்கு கீழே விஷப்பை அமைந்துள்ளது. விரியன் ரக பாம்புகள் வேகமாக அட்டாக் செய்வதாக், தாக்கிய இடத்தில் ஊசி போல பற்களை இறக்கி அதிகமான விஷத்தை உடலுக்குள் செலுத்தி விடும். பொதுவாக, பாம்பு கடித்த இடத்தில் இரு பற்களின் தடம் மட்டுமே காணப்படும். அப்படியென்றால், விரியன் ரக பாம்பு நம்மை கடித்துள்ளதாக உறுதியாக நம்பலாம். அதே வேளையில், விஷமற்ற பாம்புகள் கடித்தால் பல பற்களின் தடம் கடிபட்ட இடத்தில் காணப்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பாம்பு கடித்து விட்டால்,உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வது சாலசிறந்தது.



Leave a Reply