விமான நிலைய விரிவாக்கம்: சாலை பிரச்சினையில் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி. அருண்குமார் ஆய்வு……

Spread the love

விமான நிலைய விரிவாக்கத்தில்  சாலை பறி போவதை தடுக்க வேண்டும் அல்லது மாற்று வழியை ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் ஆய்வு மேற்கொண்ட அதிமு​க ​ட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்

கோவை விமான நிலைய விரிவாக்த்திற்காக பிருந்தாவன் நகர் , பூங்கா நகர் , உள்ளிட்ட பகுதிகளில் 2000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சார்ந்த  மக்கள் விமான நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள 40 அடி சாலையை நம்பியே வேலை கல்லூரி பள்ளி போன்ற தேவைகளுக்காக போக்குவரத்துக்கு பயன் படுத்தி வந்த நிலையில் விரிவாக்கத்துக்காக எடுக்கும் போது  தங்களுக்கான பிரதான சாலையே இல்லாமல் போய் விடும் என இன்று அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அதிமுக எல் எல் ஏ பி ஆர் ஜி அருண்குமாரிடம் அப்பகுதி மக்கள் எடுத்துரைத்தனர் . இவ்விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்