விமான நிலையத்திற்கு இமெயில் மூலம் புதன் கிழமை 10.30 மணி அளவில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. மத்திய தொழில் பாதுகாப்பு படையின் வெடிகுண்டு செயலிழக்க வைக்கும் பிடிடிஎஸ் பிரிவினர் அதிகாலை வரை கோவை விமான நிலையத்தில் சோதனை அதிகாலை வரை நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.
இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கோவை மாநகரில் கடந்த சில தினங்களாக பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் , விமான நிலையம் என பல்வேறு தரப்பிற்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.



Leave a Reply