விமான டிக்கெட்டுகள் ரத்து செய்யும் போது பயணிகளுக்கு வழங்கப்படும் பணம் (ரீபண்டு) மிகக் குறைவாக இருப்பது குறித்து நீண்டநாள் புகார்கள் எழுந்திருந்தன. இதையடுத்து, இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) புதிய திருத்த விதிமுறைகளை அறிவித்துள்ளது.
அதன்படி, பயணிகள் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த 2 நாட்களுக்குள் எந்தக் கட்டணமும் இன்றி டிக்கெட்டை ரத்து செய்யவோ அல்லது பயண தேதியை மாற்றவோ முடியும். இந்த சலுகை அனைத்து உள்நாட்டு விமான சேவைகளுக்கும் பொருந்தும் எனவும், இது பயணிகளுக்கு நியாயமான ரீதியில் நிவாரணம் அளிக்கும் நடவடிக்கையாகவும் DGCA தெரிவித்துள்ளது.
புதிய விதிமுறை குறித்து பொதுமக்களின் கருத்துக்களை பெற்ற பிறகு, இறுதி வடிவத்தில் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Leave a Reply