கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
கோவை டவுன் ஹால் பகுதியில் உள்ள கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஒட்டி கடந்த வாரம் தேர் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி மற்றும் பூச்சாட்டு விழாவும் நடைபெற்றது.
தொடர்ந்து கோவிலில் கொடியேற்றம், சிறப்பு பூஜை திருக்கல்யாணம் ஆகியவற்றை நடைபெற்றது. தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது.ராஜவீதி தேர்நிலை திடலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேர் புறப்பட்டு ஒப்பணக்காரவீதி,வைசியாள் வீதி,கருப்பகவுண்டர் வீதி வழியாக மீண்டும் ராஜவீதி தேர்நிலையை அடைந்தது.திருத்தேர் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோணியம்மனை தரிசனம் செய்தனர்.
அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மேலும் தேர் பவானி நடைபெறுவதால் டவுன் ஹால் முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது போலீசார் வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட்டனர்.இந்த பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



Leave a Reply