,

விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவரை காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கனிமொழி

கனிமொழி
Spread the love

திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கோவையில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு கோவையில் இருந்து திருப்பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவிநாசி நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த மாணவர் ஒருவர் லாரியில் மோதி விபத்தில் சிக்கிய நிலையில் மயங்கி கிடந்துள்ளார். விபத்தில் சிக்கிய மாணவரை மீட்டு, தி.மு.கவை சார்ந்த ஒருவரின் வாகனத்தில் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார் கனிமொழி. அதனைத் தொடர்ந்து, மாணவரை சேர்த்து உள்ள கோவை பிரேமா மருத்துவமனைக்கு சென்று உடல் நிலையை குறித்து தெரிவிக்குமாறு மருத்துவரிடம் கூறினார்.

விபத்தில் சிக்கிய அந்த மாணவன் கோவை டாக்டர். என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் படித்து வரும் ராபின் என்பது தெரிய வந்துள்ளது.