, , ,

வினேஷ் போகத்துக்கு தமிழநாடு முதலமைச்சர் ஆதரவு ……

sports
Spread the love

ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஆதரவு தெரிவித்து உள்ளார்.  நீங்கள் ஒவ்வொரு வகையிலும் உண்மையான சாம்பியன் என்று வினேஷ் போகத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ‘வினேஷ், நீங்கள் ஒவ்வொரு வகையிலும் உண்மையான சாம்பியன். உங்கள் பின்னடைவு, வலிமை, இறுதிப் போட்டிக்கான பயணம் கோடிக்கணக்கான இந்திய மகள்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. சில கிராம் உடல் எடையினால் ஏற்பட்டுள்ள தகுதி இழப்பு உங்கள் மன உறுதியையும் சாதனைகளையும் குறைக்க முடியாது. நீங்கள் ஒரு பதக்கத்தைத் தவறவிட்டாலும், உங்கள் அபாரமான மன உறுதியால் அனைவரின் மனதையும் வென்றுவிட்டீர்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.