, , , , , , , , , , , , , , ,

விண்வெளியில் இந்திய விவசாய பயிர்கள் விளைவிக்கலாம் மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

Spread the love

கங்கா செவிலியர் கல்லூரியில் மாணவர் மேம்பாடு கருத்தரங்கு இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்பு .

கோயம்புத்தூர் ஜனவரி 11
கோவை வட்டமலை பாளையம் பகுதியில் உள்ள கங்கா செவிலியர் கல்லூரி மற்றும் அறிவியல் மையத்தில் மாணவர்கள் மேம்பாடு திட்டம் சேவை ஒரு தொழிலாக என்ற தலைப்பில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.

கருத்தரங்கை கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் கனவல்லி சண்முகநாதன் இயக்குனர் ரமாராஜசேகர் நிர்மலா ராஜா சபாபதி ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

கல்லூரி முதல்வர் எஸ்தர் ராகேல் வரவேற்று பேசினார் நிகழ்ச்சியில் செவிலியர் பட்டப்படிப்பு படிக்கும் மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில்

இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி மருத்துவத்துறையில் படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு பயனுள்ள.சேவை ஒரு தொழிலாக என்ற தலைப்பில் பேசினார்..

அப்போது அவர் பேசியதாவது: நான் இஸ்ரோவில் இணைந்துவுடன் செயற்கைக்கோள், சாப்ட்வேர் இரண்டிலும் கவனம் செலுத்தப்பட்டது. நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டறிய நிலவு முழுவதும் தேட வேண்டும் என நினைத்தோம். நிலவில் இறங்காமல் துருவ பாதையில் சுற்றி வந்து ஆய்வு செய்ய விரும்பினோம். அது மிகவும் சவாலாக இருந்தது. அதற்காக எடுக்கப்பட்ட நான்கு வருட கடும் உழைப்பு பயனாக இந்தியாவின் சந்திராயன்-1 செயற்கைக்கோள் மூலம் நிலவில் நீர் மூலக்கூறுகள் இருப்பது கண்டறிந்தோம். நிலவு தொடர்பாக ஆய்வில் மற்ற நாடுகள் பல முறை முயற்சிக்கும் ஒரு விஷயத்தை இந்தியா ஒரே முறையிலேயே சாதித்துள்ளது. சந்திராயன் வாயிலாக, நிலவில் நீர் இருப்பது கண்டறிந்த பின், மற்ற நாடுகள் இதில் மீண்டும் கவனம் செலுத்தி வருகின்றன. மகாபலிபுரத்தில் இருந்து ஏவப்பட்ட 140-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களுடன் சென்ற ராக்கெட்டின் மூலம் உலகம் மீண்டும் ஒருமுறை இந்தியாவை திரும்பிப் பார்த்தது. மருத்துவம் போன்ற துறைகளை மேம்படுத்த விண்வெளி சார்ந்த அறிவியல் ஆராய்ச்சிகள் அவசியமாக உள்ளன. மருத்துவத்தில் தற்போது டெலி சர்ஜரி மற்றும் சர்ஜிக்கல் ரோபோ சிகிச்சை வந்துள்ளது. இதனால் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்தாலும் அவருக்கு தேவையான ஆப்ரேஷன் செய்ய முடியும். நர்சிங் ஏ.ஐ டெக்னாலஜி பயன்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. உங்களால் வாழ்நாள் முழுவதும் சேவை செய்ய முடியும். எந்த நேரத்திலும் படிப்பதை நிறுத்து விட கூடாது. தொடர்ந்து படித்து கொண்டே இருக்க வேண்டும். இது உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து

. மாணவர்கள் மாணவிகளை கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது.

இஸ்ரோ தலைமை பொறுப்பில் தொடர்ந்து தென்னிந்தியர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது பயிற்சி கூறியது ஆராய்ச்சி துறையில் பல்வேறு சாதனைகளை அடுத்தடுத்து நிகழப் போகிறது விண்வெளியில் தமது இந்திய பயிர்களை விவசாயம் செய்யும் அளவு விரைவில் உருவாகும்

ஏ ஐ தொழில்நுட்பம் படிக்கும் மாணவ மாணவிகள் அதைப்பற்றி முழுமையாக கற்று அறிந்து அதற்குப்பின் அவற்றின் செயல்பாடு குறித்து ஆராய்ந்து படிக்க வேண்டும்.

தமிழகத்தில் 2000 பள்ளிகளில் விவசாய முதல் விண்வெளி வரை என்ற ஆராய்ச்சி கூடம் ரூபாய் 500 கோடிகள் அமைப்பதற்கு அரசுடன் இணைந்து விரைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்