தெலுங்கு திரையுலகின் இளமை ஜோதி விஜய் தேவரகொண்டா, வித்தியாசமான கதைகள் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளார். தற்போது, தனது 12-வது திரைப்படமான ‘கிங்டம்’ படப்பிடிப்பை முடித்து, ரிலீஸுக்குத் தயாராக உள்ளார்.
இந்தப் படத்தை, ‘ஜெர்சி’ மற்றும் ‘மஜிலி’ புகழ் கவுதம் தின்னனுரி இயக்கியுள்ளார். தயாரிப்பில் சித்தாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் போர்ஸ் சினிமாஸ் என இரண்டு முன்னணி நிறுவனங்கள் இணைந்துள்ளன.
இசையில் எப்போதும் ஹிட் கீ கொடுக்கும் அனிருத் தான் இப்படத்தின் ஹார்மோனிக்கா. அவரது இசை இந்தப் படத்துக்கே ஒரு புதிய உயிராக அமைய இருக்கிறது. கதாநாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ், மற்றும் முக்கிய கதாப்பாத்திரங்களில் சத்யதேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் அடுத்த மாதம் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது தொடர்பாக வெளியான டீசர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது, ‘ஹிருதயம் லோபலா’ எனப்பெயரிடப்பட்ட முதல் பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது. முழுப் பாடல் வரும் மே 2ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply