அப்போது அவர் கூறியதாவது:
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சி அண்டை நாடான மலேசியாவே வியக்கும் அளவிற்கு பிரமாண்டமாக நடைபெற்றது. உலக நாடுகள் திரும்பிப் பார்க்கும் வகையில் அந்த விழா அமைந்திருந்தது. மலேசியாவில் இதுவரை பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் மட்டுமே ரோட் ஷோ நடத்தியுள்ளனர். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவருக்கு அந்த அனுமதி வழங்கப்பட்டிருப்பது வரலாற்றுச் சிறப்புடையதாகும்.
தமிழகத்தில் அவர் தற்போது வரலாற்று நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். எதிர்காலத்தில் தமிழகத்தை ஆள அவருடைய தலைமை அவசியம் என்ற எண்ணம் பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட 18 முதல் 35 வயது வரையிலான இளைஞர்கள் மத்தியில் ஒருமனதாக வெளிப்பட்டு வருகிறது. பல்வேறு நிகழ்ச்சிகளில் கூட்டம் ஆர்ப்பரித்து அலைமோதுவதை பார்க்க முடிகிறது. இது 1972ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கும், 1988ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கும் ஏற்பட்ட ஆதரவு போன்று ஒரு மாற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த மாற்றம், மக்கள் சக்தியோடு இணைந்து அவரை தமிழக முதலமைச்சராக அமர வைக்கும்.
காங்கிரஸ் நிர்வாகிகள் தவெகவுடன் இணைவது குறித்து பேசி வருவதாக கூறப்படும் தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பியபோது, பல இடங்களில் இத்தகைய கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருவதாக அறிந்துள்ளதாகவும், ஆனால் அவை தன்னைப் போன்றவர்களின் கவனத்திற்கு நேரடியாக கொண்டு வரப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த குழந்தை என திருமாவளவன் விமர்சித்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ஒவ்வொரு தலைவரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருவதாகவும், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் குரல் கொடுத்ததாக கூறிய சிலர் பின்னர் அங்கு விருந்து உண்டு பரிசு பெற்ற காலமும் இருந்தது என்றும் செங்கோட்டையன் விமர்சித்தார்.
கூட்டணியில் மற்ற கட்சிகள் எப்போது இணைவார்கள் என்ற கேள்விக்கு, ஜனவரி முதல் வாரத்திற்குள் அனைத்தும் தெளிவாகும்; பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.
100 நாள் வேலை திட்டம் தொடர்பான கேள்விக்கு, எல்லோரும் வாழ வேண்டும், அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு என்று கூறினார்.
மேலும், ஒரு புதிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இது வரலாறு படைக்கும் இயக்கமாக உருவாகி வருவதாகவும் தெரிவித்தார். மக்கள் கோரிக்கைகளை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்பதை ஆய்ந்து கற்றுக்கொள்ள வேண்டிய கட்டத்தில் இருப்பதாகவும் கூறினார்.
தவெகா சார்பில் தெளிவான நிலைப்பாடு எடுத்துள்ளதாகவும், விஜய்யை முதலமைச்சராக ஏற்றுக் கொள்வார்கள் என்ற அடிப்படையில்தான் கூட்டணியில் இணைய முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஈரோடு பொதுக்கூட்டத்தில் கொள்கை ரீதியான கருத்துக்கள் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டதாகவும், யாரை எதிர்க்கிறோம் என்பதை தொண்டர்கள் வெளிப்படையாக தெரிவித்ததாகவும், மக்களின் உணர்வுகளை விஜய் பிரதிபலித்து வருகிறார் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.



Leave a Reply