தளபதி விஜய் தலைமையிலான த.வெ.க. (தமிழக விழுப்புரம் கல்வி வளர்ச்சி கட்சி) பொதுக்குழு கூட்டத்தில் விஜய் உரையாற்றியதைத் தொடர்ந்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
“பொது வாழ்வில் ஆத்திச்சூடியே அறியாதவர் விஜய். கரூர் கொடுந்துயருக்கு முழுக்காரணமானவர் விஜய் என்பதையும், தற்போது பொறுப்பற்ற முறையில் திசைதிருப்ப முயல்கிறார் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். நடந்த சம்பவத்துக்கு துளியளவும் வருத்தமோ, குற்ற உணர்ச்சியோ இல்லாமல் இருக்கிறார் விஜய்.
அவர் ‘காகிதக் கப்பலில் கடல் தாண்ட முனைகிறார்’. ஆகாய வெளியில் கோட்டை கட்டுகிறார். அவரது நம்பிக்கைக் கனவுகள் கானல் நீராக மாறும். தி.மு.க.வை சற்றும் மான வெட்கமின்றி எள்ளிநகையாட முனைகிறார் விஜய்.
முதலமைச்சர் மீது வெறுப்பையும் கசப்பையும் கொட்டி தீர்த்துள்ளார். விஜயின் நிலைமை அனுதாபத்திற்கும், பரிதாபத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது. அவர் அரசியல் நாகரிகத்தை கடைபிடித்து நிதானமாக நடக்க வேண்டும்,” என்று வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.



Leave a Reply