விஜயதசமியை முன்னிட்டு கே.எஸ்.அகாடமியின் சிறப்பு சலுகைகள்

Spread the love

கோயம்புத்தூர் வர்த்தகப் புலத்தில் படிக்கும் மாணவர்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்பாகக் கருதப்படும் சாட்டர்ட் அக்கவுண்டன்சி படிப்பில் சேர்வதற்கான சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் கே எஸ் அகாடமி அறிவித்துள்ளது. விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு இந்தச் சலுகைகள் அறிவிக்க ப்பட்டுள்ளன.
+2, பி காம் முடித்த மாணவர்களுக்கு தனிப்பட்ட வாய்ப்பாக
அகாடமி வெளியிட்ட தகவலின்படி, +2 தேர்வு முடித்த மாணவர்கள் நேரடியாக சி ஏ ஃபவுண்டேஷன் படிப்பில் சேரலாம். அதேபோல், பி காம் முடித்தவர்கள் சில இன்டர்மீடியட் படிப்பில் நேரடியாக சேரும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
இவ்வாறு தங்களது கல்வித் தரத்திற்கேற்ற படிநிலையைத் தேர்ந்தெடுத்து மாணவர்கள் தங்கள் தொழில் வெற்றிப்பாதையில் முதல் அடியை எடுத்து வைக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
விஜயதசமி சிறப்பு சலுகையாக
விஜயதசமி நாளில் அகாடமியை நேரில் வந்து முன்பதிவு செய்யும் மாணவர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் குறைந்த கட்டணத்தில் சேரும் வாய்ப்பு வழங்க ப்படுவதாக கே எஸ் அகாடமி அறிவித்துள்ளது. இது மாணவர்களுக்கு பொருளாதார சுமையை குறைத்து, அவர்களை உயர்கல்வி நோக்கி ஊக்குவிக்கும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.
கே எஸ் அகாடமி கோயம்புத்தூர் கிளையின் தலைமைச் செயல் அதிகாரி தீபக் பாண்டியன் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது:
“இன்றைய இளைஞர்கள் எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவதற்கு சிஏ படிப்பு மிகச்சிறந்த பாதையாகும். கே எஸ் அகாடமி எப்போதும் மாணவர்களின் முன்னேற்றத்தையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த விஜயதசமி சலுகைகள் மூலம் மேலும் பல மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். இன்று எடுக்கப்படும் சரியான முடிவு நாளைய தொழில் வெற்றியை தீர்மானிக்கும்” என்றார்.
கே எஸ் அகாடமி சிஏ கல்வியில் முன்னணி பயிலகமாக
கோயம்புத்தூரில் கல்வித் துறையில் சிறந்த பெயரை பெற்றுள்ள
கே எஸ் அகாடமி சிஏ படிப்பிற்கான சிறப்பு பயிற்சிகளை வழங்கி வருகிறது. கோவை கிகானி பள்ளி எதிராக அமைந்துள்ள எங்கள் அகாடமியில் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள், புதுமையான கற்பித்தல் முறைகள் மற்றும் தேர்வுக்கான முழுமையான பயிற்சி மூலம் பல மாணவர்கள் வெற்றிகரமாக சார்ட்டட் அக்கவுண்டன்ட் ஆகி உள்ளனர், இவ்வாறு அவர் கூறினார்.