உத்தரபிரதேச மாநிலம் வராணாசியி லுள்ள சாந்த் அதுலானந் பள்ளியில் அகில இந்திய அளவில் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி 13ம் தேதி வரை முதல் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான வீரர்- வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் பிருந்தாவன் வித்யாலாயா பப்ளிக் பள்ளி மாணவர்கள் 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
கோவை மதுக்கரை பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளியிலிருந்து ஐஸ்வர்யா, பார்த்திபன், ஷான் சேவியர், கிருத்திகா, மிருதுளா, ரக்சனா, ஷிபானி ஆகியோர் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர்.
இதில், 17 வயதுக்குட்டோருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் 5.34 மீட்டர் தொலைவு தாண்டி கிருத்திகா தங்கப்பதக்கம் பெற்றார். அடுத்து, தொடர்ஓட்டத்தில் அர்ச்சனா, ஷிபானி, மிருதுளா, கிருத்திகா ஆகியோர் பந்தய தொலைவை 51.45 விநாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றனர். இது, சி.பி.எஸ்.சி பள்ளி அளவில் தேசிய அளவில் நிகழ்த்தப்பட்ட புதிய சாதனை ஆகும். பிருந்தாவன் வித்யாலாயா பப்ளிக் பள்ளியின் வீரர் வீராங்கனைகளுக்கு உடல்கல்வி ஆசிரியர்கள் மோகன்ராஜ், உதயபிரகாஷ், திவ்யா சிறப்பான பயிற்சி அளித்திருந்தனர். தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம் சென்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வர் வனிதா திருமூர்த்தி, தாளாளர் வசந்தராஜன் மற்றும் ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினர்.
வாரணாசியில் நடந்த தேசிய தடகளப் போட்டி பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளி மாணவிகள் 5 தங்கம் வென்று சாதனை



Leave a Reply