, , ,

வாடிப்பட்டி பகுதியில் தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா…!

madhurai
Spread the love

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் , 72 ஆவது பிறந்தநாள் விழா, மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் அன்னதானங்கள் வழங்கி கொண்டாடப்பட்டது. வாடிப்பட்டி பேரூர் கழகத்திற்கு உட்பட்ட வார்டு பகுதிகள் மற்றும் பெருமாள்பட்டி செம்மனிப் பட்டி, பூச்சம்பட்டி ஆகிய பகுதிகளில் தேமுதிக கொடியேற்றி பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்குஇனிப்புகள் வழங்கப்பட்டது. இரவு, கேப்டன் விஜயகாந்த் நடித்த திரைப்படங்கள் பொது மக்களுக்கு ஒளிபரப்பப்பட்டது. வாடிப்பட்டி பேரூர் செயலாளர் பாலாஜி மற்றும் நிர்வாகிகள் கிருஷ்ணன் பெருமாள்பட்டி நிர்வாகிகள் செம்மினி பட்டி பகுதி தேமுதிக பொறுப்பாளர்கள் ராஜாமணி அழகர் மற்றும் கரந்தமலை பூச்சம்பட்டி பொறுப்பாளர்கள் கருப்பையா, சூரிய பிரகாஷ், பாண்டி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.