, ,

வாடிப்பட்டியில்  ரேஷன் கடை சமுதாயக் கூடங்கள் -வெங்கடேசன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்

ration shop
Spread the love

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட விராலிப்பட்டி, குட்லாடம்பட்டி, கச்சைகட்டி ராமையன்பட்டி, ஆண்டிபட்டி மற்றும் வாடிப்பட்டி பேரூராட்சி 1-வது வார்டு சாணாம்பட்டி ஆகிய இடங்களில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையைப் திட்டம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் புதிதாக கட்டப்பட்ட ரேசன் கடை, சமுதாயக்கூடம், நூலகம், அங்கன்வாடி மையம்,உணவு தானியக்கிடங்கு.பள்ளி வகுப்பறை கட்டிடம், விதை சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட 20 கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது.
இந்த விழாவிற்கு, வெங்கடேசன் எம்.எல்.ஏ.,தலைமை தாங்கி திறந்து வைத்தார். இதில்,யூனியன் கமிஷனர்கள் லட்சுமி காந்தம், பொற்செல்வி, செயல் அலுவலர் ஜெயலட்சுமி,பேரூராட்சித் தலைவர்கள் மு. பால்பாண்டியன், ஜெயராமன், ஒன்றியச் செயலாளர் பால. ராஜேந்திரன், பசும்பொன் மாறன், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ், முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் அயூப் கான், ஊராட்சி மன்ற தலைவர்கள் காளியம்மாள், ஜோதி மீனா, குருமூர்த்தி, மீனாள், ஊராட்சி துணைத் தலைவர் கதிரவன், ராஜலட்சுமி, ஊராட்சி செயலாளர்கள் விக்னேஷ், தனலட்சுமி, புஷ்பலதா, மகாராஜன், செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.